என் மலர்

  சினிமா

  ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் அஜித் - ஷாலினி அஞ்சலி
  X

  ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் அஜித் - ஷாலினி அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெற்று வரும் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். #Sridevi
  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

  ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாக பிரதேச பரிசோதனையில் தெரியவந்தது. 

  பின்னர் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.   இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  மேலும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.   நடிகர் சங்கமும் ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். #Sridevi
  Next Story
  ×