என் மலர்
சினிமா

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறது. #IAK
அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்ஙத படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியதுடன், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. சாம்.சி.எஸ். இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #IAK #Arulnidhi
Next Story