என் மலர்

  சினிமா

  அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய ஜுங்கா
  X

  அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய ஜுங்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் ஜுங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. #Junga #JungaDubbingStarted
  விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’.

  கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

  முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.    சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். 

  சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Junga #JungaDubbingStarted

  Next Story
  ×