என் மலர்

  சினிமா

  அஜித்துடன் இணையும் விஜய் பட இயக்குநர்
  X

  அஜித்துடன் இணையும் விஜய் பட இயக்குநர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித், அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு பின்னர் அஜித்தின் 60-வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் கசிந்திருக்கிறது. #Thala60 #Ajithkumar
  `விவேகம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

  இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பபதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. எச்.வினோத் படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.   சமீபத்தில் அஜித்தை சந்தித்த பிரபுதேவா, அவரிடம் ஒருவரிக் கதையை சொல்லியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்துப் போனதால் விரைவில் இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை `அறம்', `குலேபகாவலி' படத்தை இயக்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  இந்த மாதம் துவங்கும் விஸ்வாசம் படத்தின் படப்படிப்பு ஜூலையில் முடிந்த பிறகு, ஆகஸ்ட்டில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala60 #Ajithkumar

  Next Story
  ×