என் மலர்
சினிமா

சூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த ‘சூர்யா 36’ படத்திற்கு தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். #Suriya36 #NGKdiwali2018
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. இந்த புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி, இப்படத்திற்கு ‘NGK’ (‘என்ஜிகே’) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
வித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டரும், தலைப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #Suriya36 #NGKdiwali2018
Next Story