என் மலர்

  சினிமா

  ரஜினி, கமலுக்கு ஜோடியாக போட்டி போடும் கதாநாயகிகள்
  X

  ரஜினி, கமலுக்கு ஜோடியாக போட்டி போடும் கதாநாயகிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Rajinikanth #KamalHaasan
  ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துள்ளதால் சினிமாவில் நடிப்பார்களா? விலகி விடுவார்களா? என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் இருவருமே மீண்டும் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரஜினியும், ஷங்கர் டைரக்டு செய்யும் இந்தியன்-2 படத்தில் கமலும் நடிக்க உள்ளனர்.

  படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. அரசியல் பணிகளுக்கு இடையில் இந்த படங்களில் நடிக்க இருவரும் தயாராகிறார்கள். ஓரிரு வாரங்களில் படப்பிடிப்புக்கான தேதியை அறிவிக்க உள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  ரஜினியின் முந்தைய படங்களில் நயன்தாரா, ஸ்ரேயா, அனுஷ்கா, தீபிகா படுகோனே, சோனாக்சி சின்ஹா சமீபத்திய கபாலி படத்தில் ராதிகா ஆப்தே என்று பல நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். புதிய படத்தில் அவருடன் ஜோடி சேருவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படங்களான பீட்சாவில் ரம்யா நம்பீசனும், ஜிகர்தண்டாவில் லட்சுமி மேனனும், இறைவி படத்தில் அஞ்சலியும் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். தற்போது ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே, கங்கனாரணாவத், ராதிகா ஆப்தே ஆகிய இந்தி நடிகைகளில் ஒருவரை தேர்வு செய்யலாமா என்றும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.  திரிஷா முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நடித்து விட்டார். ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது என்று கூறியிருந்தார். ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் ரஜினியுடன் ஜோடிசேர படக்குழுவினரை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.

  இந்தியன்-2 படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா பெயர் அடிபடுகிறது. முந்தைய விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜாகுமார் பெயரும் பரிசீலனையில் உள்ளது. #Rajinikanth #KamalHaasan

  Next Story
  ×