என் மலர்

  சினிமா

  சமூக வலைதளத்தில் வைரலாகும் சீதக்காதி
  X

  சமூக வலைதளத்தில் வைரலாகும் சீதக்காதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீதக்காதி கட்அவுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர் என புகழ்பெற்றவர் விஜய் சேதுபதி. 

  இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி தற்போது `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', `செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

  இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மிக வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.   நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் சேதுபதியின் வயதான கெட்அப் அடங்கிய கட்அவுட்டுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள், பால் அபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர். அந்த புகைப்பம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலலாக பரவி வருகிறது. 

  பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நயன்தாராவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

  விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

  Next Story
  ×