என் மலர்
சினிமா

2 மாதத்திற்கு முன்பே அஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்
அஜித்தின் பிறந்த நாள் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அவருடைய ரசிகர்கள் இன்றே சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள். #2MonthsToஅஜித்অজিতఅజిత్BDay
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்து வருகிறது. இப்படம் வெளியாகும் நாளை திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
1971ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தார். இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால், இந்த வருடம் அஜித்தின் பிறந்த நாளுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். டுவிட்டரில் #2MonthsToஅஜித்অজিতఅజిత్BDay இந்த ஹாஷ்டேக்கை பயன்படுத்தி டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
Next Story