search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?
    X

    அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?

    அடுத்தடுத்து சிவா இயக்கத்திலேயே நடித்து வரும் நடிகர் அஜித், அடுத்ததாக `விஸ்வாசம்' படத்திலும் சிவாவுடன் இணைந்திருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #Ajithkumar
    `விவேகம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பபதாக கூறப்படுகிறது. 

    `சதுரங்க வேட்டை' படத்தை முடித்த வினோத், அப்போதே அஜித்திடம் ஒரு கதை கூறியிருக்கிறாராம். அஜித்துக்கு கதை பிடித்துப் போக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பே இருவரும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாகி விட்டார்களாம். இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று பட ரிலீசுக்கு பிறகு அஜித், வினோத்தை அழைத்து பேசினாராம். அதில் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாகவும், விஸ்வாசம் படத்தை முடித்த பிறகு அஜித், வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    இந்த மாதம் துவங்கும் விஸ்வாசம் படத்தின் படப்படிப்பை ஜூலையில் முடிக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித், நயன்தாரா இணையும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

    எச்.வினோத் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. #Thala59 #Ajithkumar
    Next Story
    ×