search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகருக்கு, நடிகை கொடுத்த முத்தம் - ஆடிப்போன திரையுலகம்
    X

    நடிகருக்கு, நடிகை கொடுத்த முத்தம் - ஆடிப்போன திரையுலகம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நித்யா மேனன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நானிக்கு கொடுத்த முத்தம் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. #Awe #NithyaMenon
    நானி தயாரித்து நடித்துள்ள தெலுங்கு படம் ‘அவே’. இதில் நித்யாமேனன், காஜல் அகர்வால், ரெஜினா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

    நானி மேடையில் பேசும்போது, நித்யாமேனனை புகழ்ந்தார். ‘‘நித்யாமேனன் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் கொண்டது. அவரைத்தவிர வேறு யாராலும் இந்த பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது’’ என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த நித்யாமேனன், தன்னை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நானிக்கு பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்தார். தன்னை புகழும் நானிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நித்யாமேனன் பறக்கும் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.



    படவிழாவுக்கு வந்தவர்கள், நித்யாமேனன் கொடுத்த பறக்கும் முத்தத்தை பற்றிதான் அதிகமாக பேசிக் கொண்டார்கள் என்று தெலுங்கு பட உலகினர் விமர்சனம் செய்துள்ளனர். #Awe #NithyaMenon
    Next Story
    ×