search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்
    X

    நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்

    கணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா உண்ணி என்ஜீனியரை திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.
    பிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணி. இவர் பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளான மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு திவ்யா உண்ணி உறவினர்.

    2002-ல் திவ்யா உண்ணிக்கும் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திவ்யா உண்ணி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

    அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ள ஹூஸ்டனில் திவ்யா உண்ணி நடன பள்ளி நடத்தி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா உண்ணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை.


    நடிகை திவ்யா உண்ணி - அருண்குமார் திருமணம் நடந்த போது எடுத்த படம்

    விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் திவ்யா உண்ணி திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். மணமகன் பெயர் அருண்குமார். இவரும் அமெரிக்காவில் என்ஜீனியராக இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது.

    நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இது காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமா? என்று தெரியவில்லை. திவ்யா உண்ணி 2-வது திருமணம் செய்து கொண்டது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×