என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் - உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்
Byமாலை மலர்6 Feb 2018 4:19 AM GMT (Updated: 6 Feb 2018 4:19 AM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த 2 படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். #Nayanthara #Viswasam
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' படத்திற்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கோலமாவு கோகிலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்' படத்திலும், `லெக்ஷ்மி', `மா' குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ஆம் தேதி ஆரம்பமாகிறது.
மேலும் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். #Nayanthara #Viswasam
Next Story
×