என் மலர்

  சினிமா

  மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு?
  X

  மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா டிக்கெட் விலை உயர்வு, வினியோகஸ்தர்கள் தலையீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் வருகிற மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர். #ProducersCouncil
  திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகிறார்கள்.

  ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் உயர்ந்த சினிமா டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தயாரிப்பாளர் கவுன்சில் புதிய ஆப் அறிமுகம் செய்ய வேண்டும்.

  டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கியூப், யுஎப்ஓ கட்டணங்களை குறைக்க புதிய முறையை கடைபிடிக்க வேண்டும். 

  பட வினியோகஸ்தர்கள் தலையிட்டு படங்கள் திரையிடுவதை தடுக்கக் கூடாது. மினிமம் கியாரண்டி முறையில் படங்களுக்கு பணம் வழங்க வேண்டும். பட வினியோகம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர்.  இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மார்ச் மாதத்துக்குள் இவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்படுகிறது.

  இதே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆந்திர மாநில பட தயாரிப்பாளர்கள் மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

  அதுபோன்று தமிழகத்திலும் தயாரிப்பாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். அதன்படி மார்ச் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், புதிய படங்களும் ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது. #ProducersCouncil

  Next Story
  ×