என் மலர்

  சினிமா

  அனுஷ்காவால், என் மனைவி தூங்கவில்லை - ராம்சரண்
  X

  அனுஷ்காவால், என் மனைவி தூங்கவில்லை - ராம்சரண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை அனுஷ்காவால் தனது மனைவியின் தூக்கம் பறிபோனது என்று தெலுங்கு நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார். #Anushka #Bhaagamathie
  அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பாகமதி’. அசோக் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு, அனுஷ்காவை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். ‘இது என் வாழ்வில் நான் பெற்ற மறக்க முடியாத பாராட்டு’ என்று அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்தார்.

  இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அவரது மனைவியுடன் ‘பாகமதி’ படத்தை பார்த்தார்.  இது பற்றி ராம்சரண், அவரது பேஸ்புக் பக்கத்தில் ‘‘பாகமதி’ படம் பார்த்தேன். அனுஷ்கா அருமையாக நடித்துள்ளார். ‘பாகமதி’ குழுவுக்கு வாழ்த்துக்கள். படத்தை பார்த்துவிட்டு என் மனைவி இரவு முழுவதும் தூங்கவில்லை’. என்று தெரிவித்துள்ளார்.

  ‘பாகமதி’ படத்தில் நடித்ததற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிவதால், அனுஷ்கா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
  Next Story
  ×