என் மலர்

  சினிமா

  அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சூர்யா - செல்வராகவன் படம்
  X

  அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சூர்யா - செல்வராகவன் படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 36 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Suriya #Suriya36
  `தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். வில்லனாக ஜெகபதி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. 

  த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்த படத்தை தயாரிக்கின்றனர்.   சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

  இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Suriya #Suriya36

  Next Story
  ×