என் மலர்

  சினிமா

  குற்றப்பயிற்சியில் சிக்கிக் கொண்ட ப்ரியாமணி
  X

  குற்றப்பயிற்சியில் சிக்கிக் கொண்ட ப்ரியாமணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநர் பாலாவின் உதவியாளர் வெர்னிக் இயக்குநராக அறிமுகமாகும் குற்றப்பயிற்சி படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக ‘மோகினி’, ‘கர்ஜனை’ படங்கள் தயாராகி இருக்கின்றன. இந்நிலையில் மற்றொரு படம் ஒன்றில் த்ரிஷா ஒப்பந்தமாகியிருக்கிறார். 

  ‘குற்றப்பயிற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாலாவின் முன்னாள் உதவியாளர் வெர்னிக் இயக்குகிறார். த்ரிஷா இந்த படத்தில் துப்பறிவாளராக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் படம் என்றும் கூறப்படுகிறது.   ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியாமணி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

  திருமணத்திற்கு பிறகு தமிழில் ப்ரியாமணி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

  Next Story
  ×