என் மலர்

  சினிமா

  பாலியல் தொல்லை குறித்து தைரியமாக புகார் அளித்த சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு
  X

  பாலியல் தொல்லை குறித்து தைரியமாக புகார் அளித்த சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவரை தைரியமாக போலீஸில் புகார் அளித்த சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார்.
  பிரபல மலையாள நடிகை சனுஷா. இவர் வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மலையாளத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

  அப்போது அதிகாலை நேரத்தில் அவரை யாரோ தொடுவதுபோல் உணரவே உடனடியாக எழுந்துள்ளார். அப்போது அருகிலிருந்தவர் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயல்வதை அறிந்த சனுஷா, உடனே அவரைத் தடுத்து கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அதே பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த எழுத்தாளர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் உதவியுடன் அந்த நபரை டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் ஆண்டோ போஸ் எனபதும் அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.  இந்த நிலையில் ரெயிலில் நடத்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக புகார் அளித்த நடிகை சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் டிஜிபி தலைமை அலுவலகத்திற்கு சனுஷ்காவை வரவழைத்து அவரின் துணிச்சலான நடவடிக்கைக்கு டிஜிபி லோகநாத் பெஹரா பாராட்டினார்.
  Next Story
  ×