என் மலர்

  சினிமா

  சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் விஜய் மகள்?
  X

  சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் விஜய் மகள்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் மகள் திவ்யாசாஷா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay #Vijay62
  விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

  விஜய் சிறு வயதில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சினிமாவில் பாடல்களும் பாடி இருக்கிறார். ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

  விஜய் மகன் சஞ்சை வேட்டைக்காரன் படத்தில் அப்பாவுடன் நடனம் ஆடினார். இதில் தூள் கிளப்பிய அவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் மகள் திவ்யா சாஷா ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் சிறு வயது மகளாக மீனா மகள் நைனிகாவும், சற்று வயது கூடியதும் அந்த கதாபாத்திரத்தில் வருபவராக விஜய் மகள் திவ்யாசாஷாவும் நடித்தனர்.  இவர் தந்தை விஜய், பாட்டி ஷோபா சந்திரசேகரன் போல சூப்பராக பாடும் திறமை கொண்டவர். தற்போதே பல பாடல்களை அருமையாக பாடி பாராட்டுகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

  எனவே, திவ்யாசாஷா விரைவில் திரைப்படத்தில் பாடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய், மகளை தனது படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #Vijay #Vijay62
  Next Story
  ×