என் மலர்

  சினிமா

  மஞ்சு வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு
  X

  மஞ்சு வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘பத்மாவத்’ படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆமி’ என்ற படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  இஸ்லாமிய மதத்துக்கு மாறிய கவிஞரும் எழுத்தாளருமான கமலாதாஸ் என்கிற மாதவிக்குட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஆமி’ என்ற மலையாள படம் தயாராகி உள்ளது. இப்படத்தை கமல் டைரக்டு செய்துள்ளார்.

  இதில் கமலாதாஸ் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் திரிக்கப்பட்டு உள்ளதாகவும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு எற்பட்டு உள்ளது.  பத்மாவத் படம் சர்ச்சை முடிந்துள்ள சூழ்நிலையில் தற்போது மஞ்சு வாரியர் படத்துக்கு எதிர்ப்பு கிளப்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த படம் வெளியாகும்போது பிரச்சினைகள் வரும், அவற்றை எதிர்நோக்க நான் தயாராக இருக்கிறேன் என்று டைரக்டர் கமல் கூறியுள்ளார்.
  Next Story
  ×