என் மலர்

  சினிமா

  தள்ளிப்போகும் 2.0, விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்
  X

  தள்ளிப்போகும் 2.0, விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தை `விஸ்வரூபம்-2' படத்தின் மூலம் நிரப்ப கமல் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #KamalHaasan #Vishwaroopam2 #2point0
  கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. 

  இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த காட்சிகள் சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.  

  அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசனும் டப்பிங் பணிகளில் பிசியாகி இருக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. 

  பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.   கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம். அதுவும் ரஜினியின் `2.0' படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் `2.0' ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தை கமல் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  மேலும் தனது தீவிர அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக `சபாஷ்நாயுடு', `இந்தியன்-2' படங்களை முடிக்க கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.  #KamalHaasan #Vishwaroopam2 #2point0
  Next Story
  ×