என் மலர்

  சினிமா

  அடுத்த படத்தை நிறைவு செய்தார் விஜய் ஆண்டனி
  X

  அடுத்த படத்தை நிறைவு செய்தார் விஜய் ஆண்டனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக `அண்ணாதுரை' படம் வெளியாகிய நிலையில், அடுத்ததாக அவர் நடித்து வந்த `காளி' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
  விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான `அண்ணாதுரை' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில், கிருத்திகா உதயநிதி நடிப்பில் விஜய் ஆண்டனி நடித்து வந்த `காளி' படத்தின் படப்பிடிப்பும்  கடந்த திங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. 

  ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  விஜய் ஆண்டனி இசையில் `அரும்பே' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விரைவில் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. மேலும் பாடல் வெளியீட்டில் பைரேசியை தடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி அவரது சொந்த இணையதளத்திலேயே படத்தின் அனைத்து பாடல்களையும் இலவசமாக வெளியிடும் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×