search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஹார்வர்டு இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி
    X

    ஹார்வர்டு இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கனடா இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி வழங்கியுள்ளார்.
    அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் தனது இசை நிகழ்ச்சியின்போது வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

    ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு ரூ. 10 கோடியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

    கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த அக்டோபர் 20-21 தேதிகளில் ரகுமானின் இசைக் கச்சேரி நடந்தது. தமிழ் பாடல்கள் கச்சேரி 21-ம் தேதி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் திரண்ட பணத்தில் ஒரு பகுதியாக ரூ.25 ஆயிரம் டாலர்களை ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதிக்காக வழங்கினார் ரகுமான். "இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்," என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×