search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    லாரன்ஸ் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த அம்ரிஷ்
    X

    லாரன்ஸ் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த அம்ரிஷ்

    நடிகர் லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இசைப்பாளர் அம்ரிஷ், அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் இசையமைப்பாளர் அம்ரிஷ், நடிகர் ராகவா லாரன்ஸுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

    லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி அதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார் அம்ரிஷ். ‘எங்கிருந்தோ நீ வந்தாய்...’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், லாரன்ஸ் செய்த நல்ல விஷயங்களை போற்றும் விதமாக உருவாக்கி இருக்கிறார்.

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    Next Story
    ×