search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    பைரசி விஷயத்தில் யாராக இருந்தாலும் விடமாட்டேன்: விஷால் ஆவேசம்
    X

    பைரசி விஷயத்தில் யாராக இருந்தாலும் விடமாட்டேன்: விஷால் ஆவேசம்

    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் பைரசி விஷயத்தில் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்றார்.
    அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
     
    நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது:- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வது பிடிக்காது.

    ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி, சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும்.



    மெஹ்ரீனுடன் நான் `தம்ப்ஸ் அப்' விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன்முதலாக அறிமுகமாகிறார். அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் பிளாட்பாரமில் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும்.

    சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம். துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார் விஷால்.

    பைரசி விஷயத்தில் ராஜாவோ, மந்திரியோ யாராக இருந்தாலும் விடமாட்டேன். ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு இணையத்தில் படத்தை பார்ப்பது மட்டுமில்லாமல், பொதுஇடத்தில் அதுகுறித்து வெளிப்படையாக பேசுவது சரியல்ல. அவ்வாறாக பேசுவது மனவேதனையை அளிக்கிறது. எனவே தயது செய்து திரையரங்குகளில் சென்று படத்தை பாருங்கள்.

    இவ்வாறு கூறினார்.


    Next Story
    ×