search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    திரைப்பட தொழிலாளர் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண ரஜினிகாந்த் வேண்டுகோள்
    X

    திரைப்பட தொழிலாளர் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண ரஜினிகாந்த் வேண்டுகோள்

    திரைப்பட தொழிலாளர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று பெப்சி ஊழியர்களை சந்தித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
    ‘பெப்சி’ தொழிலாளர்களுடன் பணியாற்றுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 40 சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பும் நடக்கவில்லை.

    வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் ஆகிய இருதரப்புக்குமே பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இந்த பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதில் கமல்ஹாசனுடன் ஏற்கனவே இதுகுறித்து பேசியதாகவும், கமல் சில ஆலோசனைகளை கூறியதாகவும் செல்வமணி கூறியிருந்தார்.



    இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பெப்சி ஊழியர்கள் இன்று காலை ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பெப்சி ஊழியர்களுடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

    "எனக்கு பிடிக்காத சில சொற்களில் "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெபச்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"

    இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

    Next Story
    ×