search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்யின் `மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு
    X

    விஜய்யின் `மெர்சல்' படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கு புதிய தலைப்பு ஒன்று கிடைத்திருக்கிறது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படமான `மெர்சல்'  படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மெர்சரல் படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கிறார்.



    தேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் மெர்சல் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. இதில் தெலுங்கு பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு அதிரிந்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.
    Next Story
    ×