என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சவுந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
Byமாலை மலர்24 Jun 2017 5:26 AM GMT (Updated: 24 Jun 2017 5:26 AM GMT)
ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.
இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுந்தர்யா, அஸ்வின் கோர்ட்டில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story
×