என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
Byமாலை மலர்3 Oct 2016 4:08 AM GMT (Updated: 3 Oct 2016 4:08 AM GMT)
பாகிஸ்தான் நடிகர்கள் சட்டவிரோதமாக இல்லாமல், முறையான ‘விசா’வுடன் தான் இந்தியா வருகிறார்கள் என்று பழம்பெரும் நடிகர் ஓம் புரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மும்பையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த இந்தி நடிகர் சல்மான்கான், “பாகிஸ்தான் நடிகர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. கலையையும், பயங்கரவாதத்தையும் ஒன்றுபடுத்த கூடாது” என்று அவர்களுக்கு ஆதரவாக கருத்து கூறினார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக பழம்பெரும் இந்தி நடிகர் ஓம் புரி மற்றும் இயக்குனர் நாகேஷ் குகுனூர் ஆகியோர் கூட்டாக நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நடிகர் ஓம் புரி கூறியதாவது:-
கலையையும், அரசியலையும் பிரித்து வையுங்கள். பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிப்பதால் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது. அந்நாட்டு நடிகர்கள் இங்கு சட்டவிரோதமாக பணிபுரியவில்லை. முறையான ‘விசா’வுடன் தான் வருகிறார்கள்.
அவர்களை இடையில் திருப்பி அனுப்பினால், அவர்களை நம்பி முதலீடு செய்த இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். நான் 6 தடவை பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து இருக்கிறேன். அன்பையும், அரவணைப்பையும் பெற்றிருக்கிறேன்.
இவ்வாறு ஓம் புரி தெரிவித்தார்.
இயக்குனர் நாகேஷ் குகுனூர் கூறுகையில், “கலை எப்போதும் தனித்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப்போர் உள்பட நாட்டின் கடுமையான சூழ்நிலைகளை நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்றால், அதில் கலைக்கு என்று தனிக்குரல் இருந்தது” என்றார்.

Next Story
×