search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஸ்ரேயா
    X

    நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஸ்ரேயா

    “நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
    இதுகுறித்து நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-

    “எனக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தில் ரொம்ப இஷ்டம். அதை புரிந்து கொண்டு நடனம் கற்றுக்கொடுத்து என்னை அதில் சாதனை புரிய வைத்தவர் எனது அம்மா. எனவே எனக்கு அம்மாதான் குரு. சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. கோவில் விழா ஒன்றுக்கு என்னை அம்மா அழைத்து சென்று இருந்தார். அங்கு நிறைய கூட்டம் இருந்தது. எனது கையை அம்மா இறுக்கமாக பிடித்து இருந்தார்.

    மேடையில் பாடல்களுக்கு சிலர் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அதை பார்த்ததும் எனக்கு ஆசை வந்தது. அம்மாவின் கையை உதறிவிட்டு மேடையை நோக்கி ஓடினேன். கூட்டத்தில் என்னை தவறவிட்டு கண்டு பிடிக்க முடியாமல் அம்மா திணறினார். அவருக்கு அழுகை வந்தது. தேடி அலைந்தார். திடீரென்று மேடையை பார்த்த அவர் அங்கு நான் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து நிம்மதி ஆனார். அதன்பிறகுதான் அவருக்கு என்னுடைய நடன ஆர்வமே புரிந்தது.

    நடனம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். எனது நடன திறமையை பார்த்து டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க இடம் தந்தனர். பள்ளி, கல்லூரி உள்பட பல இடங்களில் என் வளர்ச்சிக்கு நிறைய பேர் உறுதுணையாக இருந்துள்ளனர். ஆசிரியர்களும் உதவி உள்ளனர். அவர்கள் எல்லோரையும் குரு ஸ்தானத்தில் வைத்தே பார்க்கிறேன்.

    குழந்தைகளை பெற்றோரை விட சிறந்த திறமைசாலிகளாக மாற்றுவது ஆசிரியர்கள்தான். அதனால் குருவே தெய்வம் என்பதை நான் கடைபிடிக்கிறேன். ஆசிரியர்களை அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும் அவர்களை எப்போதும் மனதில் நினைக்க வேண்டும்.”

    இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
    Next Story
    ×