என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சண்டை போட்ட விஜய்
Byமாலை மலர்26 July 2016 8:17 AM GMT (Updated: 26 July 2016 8:17 AM GMT)
விஜய் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சண்டை போட்டதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
விஜய் நடிப்பில் தற்போது ‘விஜய் 60’ படம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் உருவாகி வருகிறது. இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், விஜய் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தோடு வெளிநாடு சென்றவர், கடந்த சில தினங்களுக்கு சென்னைக்கு திரும்பி வந்தார்.
அவர் சென்னை திரும்பியதும் விஜய் 60 படத்துக்கான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஒரு முக்கிய சண்டைக்காட்சியை இயக்குனர் பரதன் சென்னை கோயம்போடு பேருந்து நிலையத்தில் வைத்து படமாக்க விரும்பினார்.
ஆனால், பொது இடத்தில் விஜய்யை வைத்து படமாக்குவது என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த இயக்குனர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செட்டை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கலை இயக்குனர் உதவியுடன் அமைத்து, அங்கு விஜய் சண்டை போடும் காட்சிகளை படமாக்கியுள்ளார். இந்த சண்டைக் காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே உள்ளிட்டோரும் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Next Story
×