என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபுதேவாவின் தேவி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்26 July 2016 8:02 AM GMT (Updated: 26 July 2016 8:02 AM GMT)
பிரபுதேவா நடித்துவரும் ‘தேவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
பிரபுதேவா-தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படம் ‘தேவி’. இந்த படத்தில் இந்தி நடிகர் சோனு சூட் மற்றும் எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். மேலும், வில்லனாக அமலாபாலின் தம்பி அபிஜித் பால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபுதேவாவே தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.
அதன்படி, இப்படத்தை வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில், டிரைலரையும், ஆடியோவையும் வெளியிடவுள்ளனர்.

Next Story
×