என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜோக்கருக்கு யு சான்றிதழ்
Byமாலை மலர்26 July 2016 6:26 AM GMT (Updated: 26 July 2016 6:26 AM GMT)
ஜோக்கர் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
‘குக்கூ’ படத்தை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. இப்படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். இப்படத்தின் கதாநாயகிகளாக காயத்ரி மற்றும் ரம்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும், எழுத்தாளர்கள் மு.ராமசாமி, பவா செல்லத்துரை, ச.பாலமுருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
பப்பிரெட்டிபட்டி என்கிற கிராமத்தில் இருக்கும் மன்னர் மன்னன்தான் இந்த படத்தின் ஜோக்கர். மிகவும் எளிமையான அவருக்கு அரசியல்வாதிகள் மீது கோபம். அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள தனக்கு அவர்களை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் இருக்கா என்ற கேள்விக்கான விடை தேடுவதுதான் கதைக்களமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

Next Story
×