என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுமா கபாலி இசை?
Byமாலை மலர்7 Jun 2016 12:01 PM GMT (Updated: 7 Jun 2016 12:01 PM GMT)
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் இசை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுமா என்ற கேள்வி தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக எழுந்துள்ளது.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற ஜூன் 12-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
கலைப்புலி தாணு தயாரித்துள்ள ‘கபாலி’ படத்தின் ஆடியோவை ரசிகர்கள் முன்னிலையில் வைத்து வெளியிடுவார்கள் என சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபட்டது. ஏனென்றால், கலைப்புலி தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் ஆடியோ ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
அதேபோல், இப்படத்தின் ஆடியோவும் ரசிகர்கள் முன்னிலையிலேயே வெளியிடப்படும் என கூறப்பட்டது. இதில் ரஜினி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. இதனால், ரஜினி ரசிகர்கள் பலரும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தற்போது சில காரணங்களால் ‘கபாலி’ ஆடியோவை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடாமல், நேரடியாக இணையதளத்திலேயே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கள் தலைவரை மீண்டும் ஒருமுறை நேரிடையாக பார்த்து ரசிக்கலாம் என எண்ணியிருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், ‘கபாலி’ ஆடியோவை இணையதளத்தில் நேரடியாக வெளியிடுவது குறித்து படக்குழு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்கலாம்.

Next Story
×