search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விமான நிலைய அதிகாரி இளையராஜாவின் பையை சோதனையிட்டபோது எடுத்த படம்
    X
    விமான நிலைய அதிகாரி இளையராஜாவின் பையை சோதனையிட்டபோது எடுத்த படம்

    பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரி

    ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய இளையராஜாவை பெங்களூர் விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தென்னிந்திய சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த மாபெரும் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் இளையராஜா. இவர் சினிமா மட்டுமில்லாது ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். இசைப் பணி இல்லாத சமயங்களில் இளையராஜா தனது குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் மங்களூரில் உள்ள சில கோவில்களுக்கு இளையராஜா ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் வேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜா கொண்டு வந்த பைகளை ஏர்போர்ட் அதிகாரிகள் ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    அப்போது, அவரது பையில் உடைந்த தேங்காய் துண்டுகளை பார்த்ததும், இளையராஜாவை யார் என்று தெரியாத அந்த அதிகாரி தடுத்து நிறுத்தியிருக்கிறார். அப்போது இளையராஜா உடன் இருந்த அவரது மகன் கார்த்திக் ராஜா, அதிகாரி சோதனையிட்டதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து டென்ஷனான அதிகாரி, அந்த புகைப்படங்களை அழிக்கச் சொல்லி அவரிடம் சொல்ல, கார்த்திக் ராஜாவோ மறுக்க, வாக்குவாதம் நீண்டுகொண்டே போயிருக்கிறது.

    அப்போது, அங்கு வந்த செய்தியாளர் ஒருவர் இளையராஜாவை பற்றி அந்த அதிகாரியிடம் எடுத்துக்கூறிய பிறகே, இளையராஜா அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து இளையராஜா தனது குடும்பத்துடன் புறப்பட்டு சென்றுள்ளார்.

    Next Story
    ×