என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன்: தன்ஷிகா
பி.ஜெகன்நாதனின் ‘பேராண்மை’, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் ‘அரவான்’ படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகை ஆனவர் தன்ஷிகா. தற்போது ரஜினியின் ‘கபாலி’ யில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் அக்காள் மகன் அவிஷேக் கதாநாயகனாக நடிக்கும் ‘காத்தாடி’ படத்தில் தன்ஷிகா அவரது ஜோடியாகி இருக்கிறார். எஸ்.கல்யாண் இயக்கியுள்ள இந்த படத்துக்கு பவன்–தீபன் இசை அமைத்திருக்கிறார்கள். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய தன்ஷிகா...
‘‘நான் நடிப்பை மிகவும் நேசிக்கிறேன். சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்க முடியாவிட்டாலும் இனி எல்லாமே நடிப்புதான் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ பிரச்சினைகளை, சிரமங்களை சந்தித்தேன். அவற்றில் இருந்து என்னை காப்பாற்றி வழி நடத்தியது என் தந்தையும், எனது மாமா ஒருவரும்தான்.
நான் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். இது மட்டுமல்ல ஜிம்னாஸ்டிக்கும் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த எனக்கு நல்ல படங்கள் அமைந்தன.
பெரிய இயக்குனர்கள், பெரியபடங்கள் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்’’ என்றார்.