search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இந்தி நடிகர் அமீர்கான் மனைவி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
    X

    இந்தி நடிகர் அமீர்கான் மனைவி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

    இந்தி நடிகர் அமீர்கான் மனைவி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கிரண் ராவின் படங்களை பதிவிட்டு வந்துள்ளனர். அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மனைவியும், திரைப்பட இயக்குனருமான கிரண் ராவ் (வயது 42) பெயரில் மர்ம நபர் ஒருவர் ‘பேஸ்புக்’கில் போலி கணக்கு தொடங்கி கிரண் ராவின் படங்களை பதிவிட்டு வந்து உள்ளார்.

    மேலும், அந்த நபர் ‘பேஸ்புக்’ வழியாக கிரண் ராவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவரை போலவே பேசி வந்து உள்ளார். இது தொடர்பான விவரங்கள் கிரண் ராவுக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×