search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹார்லி டேவிட்சன்
    X
    ஹார்லி டேவிட்சன்

    ஹார்லி டேவிட்சன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ப்ரொடக்‌ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் கான்செப்ட் கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA 2018 மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கும் என ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

    மேலும் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அதிகளவு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவற்றின் துவக்கமாக அறிமுகமாகி இருக்கும் லைவ் வையர் மாடல் முன்புறம் செல்ல பெல்ட் டிரைவ் முறையை பின்பற்றுகிறது. எலெக்ட்ரிக் பைட் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன்


    ஹெச்.டி. கனெக்ட் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டெலிமேடிக்ஸ் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் பேட்டரி சார்ஜ் விவரங்களை சேகரித்து ஹார்லியின் கனெக்ட்டெட் ஆப் மூலம் பயனருக்கு வழங்கும். செல்லுலார் இணைப்பு பெற்ற முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக லைவ் வையர் இருக்கும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நம்புகிறது.

    புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டும் என ஹார்லி தெரிவித்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரைடு அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல்,  ஏ.பி.எஸ்., இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×