search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா டபுள்யூ.ஆர். வி
    X
    ஹோன்டா டபுள்யூ.ஆர். வி

    ஹோன்டா டபுள்யூ.ஆர். வி இந்தியாவில் அறிமுகம்

    ஹோன்டா நிறுவனம் தனது டபுள்யூ.ஆர். எஸ்.யு.வி. மாடலின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹோன்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டபுள்யூ.ஆர். வி எஸ்.யு.வி. மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய வி வேரியண்ட் கார் விலை ரூ. 9.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய டபுள்யூ. ஆர். வி வேரியண்ட் எஸ் மற்றும் வி.எக்ஸ். ட்ரிம்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய வி வேரியண்ட் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கிடைக்கிறது. 

    இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பொசிஷன் லேம்ப்கள், ORVMகளில் டர்ன் இன்டிகேட்டர், முன்புறம் ஃபாக் லேம்ப்கள், 16-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதன் உள்புறமும் பல்வேறு அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.

    ஹோன்டா டபுள்யூ.ஆர். வி

    அந்த வகையில் காரின் உள்புறம் பிளாக் மற்றும் சில்வர் நிற இருக்கை, 6.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள், வாய்ஸ் கமாண்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கீலெஸ் ரிமோட் எண்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் புதிய வி வேரியண்ட் மாடலில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன்புறம் அமர்வோருக்கு சீட்-பெல்ட் ரிமைன்டர்கள், ஹை-ஸ்பீடு அலெர்ட், இன்டெலிஜன்ட் பிரேக் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய ஹோன்டா டபுள்யூ.ஆர். வி எடிஷன் கார் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினஅ 99 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×