search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நிசான் லீஃப்
    X
    நிசான் லீஃப்

    நிசான் லீஃப் இந்திய வெளியீடு உறுதியானது

    நிசான் இந்தியா நிறுவனம் தனது லீஃப் இ.வி. ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிடுவதை உறுதி செய்திருக்கிறது.



    நிசான் இந்தியா நிறுவனம் தனது பிரபல லீஃப் இ.வி. ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளியீட்டுக்கு முன் லீஃப் எஸ்.யு.வி. கார் உலக கோப்பை 2019 அரை இறுதி போட்டியின் போது பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய காரை காட்சிப்படுத்தியதோடு மட்டுமின்றி லீஃப் இ.வி. மாடலில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி அரை இறுதி போட்டியின் நேரலையை ஒளிபரப்பியது. நிசான் நிறுவனம் தனது லீஃப் இ.வி. மாடல் மூலம் பெங்களூரு மக்களுக்கு கிரிக்கெட் போட்டியை நேரலை செய்தது.

    நிசான் லீஃப்

    நேரலைக்கென நிசான் நிறுவனத்தின் பிரத்யேக வெஹிகில் டு ஹோம் (V2H)  சிஸ்டம் எனும் சேவை பயன்படுத்தப்பட்டது. இதை கொண்டு லீஃப் பயனர்கள் தங்களது கார்களை இரவு நேரங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுதவிர V2H சிஸ்டம் கொண்டு மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களுடன் மின்திறனை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

    உலகில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக நிசான் லீஃப் மாடல் இருக்கிறது. நிசான் லீஃப் மாடலில் 40 கிலோவாட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இது 148 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரை சார்ஜ் செய்ய ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் ஸ்டான்டர்டு மோட் காரை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு முதல் 16 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். எனினும், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு 40 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
    Next Story
    ×