search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    X
    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    இந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம்

    ரெனால்ட் நிறுவனத்தின் 2019 டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது.



    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின்கள் பி.எஸ். 4 ரக புகை விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றன. ரெனால்ட் டஸ்டர் எஸ்.யு.வி. இந்திய சந்தையில் பன்மடங்கு போட்டி காரணமாக பழைய மாடலாகி விட்டது. இதனால் இதன் விற்பனை குறைய துவங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்ட ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் தற்சமயம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் புதிய கிரில் வடிவமைப்பு, க்ரோம் அம்சங்கள் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் புதிய ஹெட்லேம்ப் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- கேஸ்பியன் புளு மற்றும் மஹோகனி பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் மிட்நைட் பிளாக் இன்டீரியர் மற்றும் புளு கிளேஸ் சீட்களை பெற்றிருக்கிறது. டேஷ்போர்டு டூயல் டோன் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் 7.0 இன்ச் மீடியாநேவ் எவல்யூஷன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி அம்சங்களை பெற்றுருக்கிறது. இதுதவிர குரல் அங்கீகாரம் மற்றும் ஈகோ கைடு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. 

    2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் dCi டர்போ டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இது இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இது 83.8 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 108.4 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    Next Story
    ×