search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் பல்சர் என்.எஸ். 125
    X
    பஜாஜ் பல்சர் என்.எஸ். 125

    விரைவில் இந்தியா வரும் பஜாஜ் என்.எஸ். 125

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் என்.எஸ். 125 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என்.எஸ். 125 மாடலை கடந்த ஆண்டு போலாந்து நாட்டில் அறிமுகம் செய்தது. இதன்பின் இந்த மோட்டார்சைக்கிள் கொலம்பிய மற்றும் இதர நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், என்.எஸ். 125 மாடல் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களில் பல்சர் மோட்டார்சைக்கிள்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதை உணர்ந்த பஜாஜ் 125சிசி பிரிவும் வளர்ச்சி பெற்று வருவதாக கருதுகிறது. இதனால் இந்த பிரிவில் களமிறக்க பல்சர் என்.எஸ். 125 சிறந்த தேர்வாக இருக்கும் என நினைக்கிறது.

    பஜாஜ் பல்சர் என்.எஸ். 125

    இந்தியாவில் 125சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான திட்டம் இருப்பதாக பஜாஜ் நிறுவனத்தின் ராகேஷ் ஷர்மா தெரிவித்திருந்தார். புதிய 2019 பஜாஜ் பல்சர் என்.எஸ். 125 மாடல் பல்சர் என்.எஸ். மாடலை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    இதில் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் நிறங்கள் வழங்கப்படுகிறது. இதன் எக்சாஸ்ட் மஃப்ளர் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்ப்லிட் சீட் வடிவமைப்பு, அகலமான டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சிறிய அளவிலான என்ஜின் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக் காண்பிக்கும்.

    பஜாஜ் பல்சர் என்.எஸ். 125 மாடலில் 124.45சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12 பி.ஹெச்.பி. பவர், 11 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×