search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6
    X
    2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6

    சர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 அறிமுகம்

    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 காரை அறிமுகம் செய்தது.



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 காபை அறிமுகம் செய்தது. பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது முதல் எக்ஸ்6 காரை 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் பி.எம்.டபுள்யூ. தனது மூன்றாம் தலைமுறை எக்ஸ்6 காரை தற்சமயம் அறிமுகம் செய்திருக்கிறது.

    புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 எஸ்.யு.வி. கூப் மாடலில் அதிநவீன வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்6 கார் - xDrive30d, xDrive40i, M50d, மற்றும் M50i என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.

    2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6

    இதன் டாப் எண்ட் எக்ஸ் 6 M50i மாடலில் 4.4-லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 515 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 750 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட் 3.0 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 395 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 760 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 காரில் 4-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், தெர்மோ-எலெக்ட்ரிக் கப் ஹோல்டர்கள், பானரோமிக் கிளாஸ் ரூஃப், பொவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் டைமண்ட் பிளஸ் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    மூன்றாம் தலைமுறை பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 காரின் விலை 64,300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 44.27 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியானதும் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். கூப் எஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×