search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 வெளியீட்டு தேதி
    X

    டுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 வெளியீட்டு தேதி

    டுகாடி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டுகாடி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா மோட்டார்சைக்கிளை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. மூன்று இடைவெளிக்கு பின் டுகாடி தனது மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இதன் வெளியீடு ஜூலை 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    புதிய டுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மாடலில் டெஸ்டாஸ்ட்ரெட்டா டி.வி.டி. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த 1,262 சிசி ட்வின் என்ஜின் 158 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம் மற்றும் 128 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸமிஷன் கொண்டிருக்கிறது.



    புதிய மாடலில் 6-ஆக்சிஸ் ஐ.எம்.யு., கார்னெரிங் ஏ.பி.எஸ்., நான்கு வித ரைடிங் மோட்கள், டுகாடி வீலி கண்ட்ரோல், டுகாடி டிராக்‌ஷன் கண்ட்ரோல், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல், ஸ்கை-ஹூக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் 5.0 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் டுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. ஆர் 1250 ஜி.எஸ். அட்வென்ச்சர் மற்றும் டிரையம்ப் டைகர் 1200 எக்ஸ்.சி.எக்ஸ். மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.
    Next Story
    ×