search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஃபோர்டு புமா காம்பேக்ட் எஸ்.யு.வி. அறிமுகம்
    X

    ஃபோர்டு புமா காம்பேக்ட் எஸ்.யு.வி. அறிமுகம்

    அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோர்டு புமா எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் புதிய ஃபோர்டு புமா கார் என்ட்ரி லெவல் இகோஸ்போர்ட் மற்றும் குகா மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும். பல்வேறு சந்தைகளில் விற்பனையை அதிகரிக்க ஃபோர்டு பல்வேறு வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

    புதிய புமா கார் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. முன்புறம் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்புற பம்ப்பரில் ஃபாக் லேம்ப்கள், பெரிய ஏர் இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முற்றிலும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது.



    இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய ஃபுளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டு நிறுவனத்தின் சின்க் 3 சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் நேவிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ஹேன்ட்ஸ்-ஃபிரீ டெயில்கேட், பிரீ-கொலிஷன் அசிஸ்ட், பெடஸ்ட்ரியன் டிடெக்‌ஷன், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், செமி ஆட்டோனொமஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. புதிய ஃபோர்டு புமா மாடலில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் இகோபூஸ்ட் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×