search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வாகன நெரிசல் - கோப்புப்படம்
    X
    வாகன நெரிசல் - கோப்புப்படம்

    இந்திய சந்தையில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் வாகன விற்பனை

    இந்திய சந்தையில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவு நிலையை சந்தித்து வருகின்றன.



    இந்தியாவில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளிலும் வாகன விற்பனை சரிந்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோமொபைல் சந்தையில் வாகன விற்பனை இரு தசாப்தங்களில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளது.

    பயணிகள் வாகன விற்பனை 30.98 சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,90,391 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்த மாதம் 2,00,790 யூனிட்களே விற்பனையாகி இருக்கின்றன. பயணிகள் கார் விற்பனை 35.95 சதவிகிதம் சரிந்து 1,22,955 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,91,979 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    யு.வி. பிரிவு வாகனங்கள் 15.22 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 67,030 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 79,063 யூனிட்கள் விற்பனையாகின. 

    வாகன நெரிசல் - கோப்புப்படம்

    வேன்கள் பிரிவு அதிகபட்சமாக 45.58 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் 10,804 யூனி்ட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19,889 யூனிட்கள் விற்பனையாகின. இதே போன்று நிலமை 2008 டிசம்பரில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பி.வி. பிரிவு வாகனங்கள் 35 சதவிகிதமும், பயணிகள் கார் பிரிவு 39.86 சதவிகிதம் சரிந்தது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய புகை விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் அமலாக இருக்கும் நிலையில், வாகன விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய புகை விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை மேம்படுத்த இதுவரை ரூ. 80,000 கோடிகளை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகன விற்பனை சரிவு மீளாத பட்சத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்க நேரிடும்.
    Next Story
    ×