search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.வி. அகுஸ்டா 800
    X
    எம்.வி. அகுஸ்டா 800

    இந்தியாவில் எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். டிராக்ஸ்டர் சீரிஸ் அறிமுகம்

    எம்.வி. அகுஸ்டா நிறுவனம் இந்தியாவில் புதிய 800 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    எம்.வி. அகுஸ்டா நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்.வி. அகுஸ்டா டிராக்ஸ்டர் சீரிஸ் மாடல்கள் 800 ஆர்.ஆர்., 800 ஆர்.ஆர். அமெரிக்கா மற்றும் 800 ஆர்.ஆர். பைரெலி என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விற்பனை துவங்கிவிட்டது.

    எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். டிராக்ஸ்டர் மற்றும் 800 ஆர்.ஆர். அமெரிக்கா டிராக்ஸ்டர் விலை ரூ. 18.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். பைரெலி டிராக்ஸ்டர் விலை ரூ. 21.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மூன்று சூப்பர்பைக் மாடல்களிலும் 798சிசி 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. @12300 ஆர்.பி.எம். செயல்திறனும், 87 என்.எம். டார்க் @10,100 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இவற்றின் சஸ்பென்ஷனுக்கு முன்புறம் 43 எம்.எம். செட்டப், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.

    எம்.வி. அகுஸ்டா 800

    எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். மற்றும் 800 ஆர்.ஆர். அமெரிக்கா மோட்டார்சைக்கிள்கள் 17-இன்ச் டையர்களை கொண்டிருக்கிறது. எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். பைரெலி மாடலும் 17 இன்ச் வீல்களை கொண்டிருக்கிறது. இதில் எம்.வி. அகுஸ்டா ஆர்.ஆர். அமெரிக்கா டிராக்ஸ்டர் லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும். 

    ஸ்பெஷல் எடிஷன் மாடல் வெறும் 200 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. எம்.வி. அகுஸ்டா டிராக்ஸ்டர் 800 ஆர்.ஆர். ஐஸ் பியல்/டார்க் மேட் கிரே மற்றும் நார்டோ கிரே/டார்க் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். அமெரிக்கா மாடல் அமெரிக்கா தேசிய கொடியை சார்ந்த நிறம் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×