search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கே.டி.எம். டியூக் 790
    X
    கே.டி.எம். டியூக் 790

    இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 அறிமுகம்

    கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது டியூக் 790 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய கே.டி.எம். டியூக் 790 விலை ரூ. 8.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக டியூக் 790 இருக்கிறது.

    கே.டி.எம். டியூக் 790 இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கும். தற்சமயம் டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஒன்பது நகரங்களில் துவங்கியுள்ளது. ஏப்ரல் 2020-க்குள் இந்த மோட்டார்சைக்கிள் 30 நகரங்களில் கிடைக்கும். இதன் விநியோகம் விரைவில் துவங்கும்.

    கே.டி.எம். டியூக் 790

    புதிய டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். மற்றும் 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்: ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது. கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் டு-வே ஷிஃப்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×