search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஒகினோவா பிரைஸ் புரோ
    X
    ஒகினோவா பிரைஸ் புரோ

    அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒகினோவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஒகினோவா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.71,900 ஆகும். இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. அத்துடன் இதில் ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

    இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இதில் எகானமி (30 முதல் 35 கி.மீ), ஸ்போர்ட் (50 முதல் 60 கி.மீ), டர்போ (65 முதல் 70 கி.மீ) ஆகிய மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன.

    தேர்வு செய்யும் நிலைக்கு ஏற்ப வாகனத்தின் வேகம் இருக்கும். அதேபோல வாகனம் பேட்டரி தீர்வதும் இதைப் பொருத்தே அமையும். எகானமியில் 88 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் ஓடக்கூடியது. வீடுகளில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் சார்ஜிங் சாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஒகினோவா பிரைஸ் புரோ

    ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர், பின்பகுதியில் இரண்டு பக்கமும் ஷாக் அப்சார்பரைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அலாரம் வசதி, ஸ்கூட்டரை கண்டறியும் வசதி, யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, நடந்து கொண்டே தள்ளிச் செல்லும் வசதி ஆகியவற்றோடு முன்புறம் மட்டுமின்றி ரிவர்ஸ் கியரும் உள்ளது. 

    புதிய ஒகினோவா பிரைஸ் புரோ ஸ்கூட்டர் கிளாஸி ரெட் பிளாக் மற்றும் ஸ்பார்க்கிள் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×