search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன்
    X
    டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன்

    டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்

    புதிய டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் மாடல் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது டி.வி.எஸ் ஜுபிடர். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மாடலானது டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்த மாடலில் தற்போது கூடுதலாக பல தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் வழங்கப்படும் புளுடூத் இணைப்பு வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஜுபிடர் க்ராண்ட் மாடலிலும் அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்த புதிய வசதி மூலமாக, ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு அழைப்புகள் செய்வது, மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்ய முடியும். மேலும், வண்டி இயங்கும்போது தானியங்கி முறையில் மெசேஜிக்கு பதில் அனுப்பும் வசதியும் உள்ளது.

    டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் மாடல்

    இந்த புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஹெல்மெட் ரிமைன்டர், அதிவேகம் குறித்த எச்சரிக்கை தகவல்களை பெற முடியும். இந்த வசதியை ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகள் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும்.

    இந்த ஸ்கூட்டரில் ஓட்டும் முறைகள் குறித்த தகவலை பதிவு செய்யும் வசதியும் இடம்பெற்று உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் புதிய நீல வண்ண பின்னணியுடன் மெருகூட்டப்பட்டுள்ளது.

    மேலும் புதிய அலாய் வீல்கள், பழுப்பு வண்ண இருக்கை கவர், முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் புட்போர்டு பீஜ் வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    முன்புற பென்டரில் க்ரோம் அக்சஸெரீகளும், எல்.இ.டி ஹெட்லைட் உள்ளிட்டவற்றுடன் மிகவும் ப்ரீமியமான ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. ஆனால், எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

    இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 8 பிஎஸ் பவரையும், 8.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டி.வி.எஸ் சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு சக்கரங்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்கும், முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகவும் தரப்படுகிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன.

    புதிய டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் மாடலானது ரூ.59,900 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா 110 மாடலுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







    Next Story
    ×