search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6
    X
    ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6

    இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 அறிமுகம்

    ஹோன்டா நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 67,490 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஹோன்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய ஸ்கூட்டரின் முன்புறம் சற்று மாற்றப்பட்டு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    ஆக்டிவா 125 பி.எஸ். 6 மாடலில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. உபகரணங்களை பொருத்தவரை ஆக்டிவா 125 மாடலில் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லிங் கேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சைலன்ட் ஸ்டார்ட், குளோவ் பாக்ஸ், சைடு-ஸ்டான்டு சென்சார், எல்.இ.டி. லைட்டிங், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸடர் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6

    இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முன்பை விட கூடுதல் விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டரும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஹோன்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. மற்றும் 10.54 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சைலன்ட் ஸ்டார்ட் அம்சம் என்ஜினை சத்தமில்லாமல் உடனடியாக ஸ்டார்ட் செய்துவிடுகிறது. ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 மாடல்: ரெபெல் ரெட், மெட்டாலிக் பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், மிட்நைட் புளு மெட்டாலிக், பியல் பிரெஷியஸ் வைட் மற்றும் மெஜஸ்டிக் பிரவுன் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×